Sunday, August 10, 2008

கமல்ஹாஸன் மீசையில்லாமல் நடித்த முதல்..........

புதிய க்விஸ்-ல் முதல் கேள்வி இதுதான்......படம் எது?

2.ஹிட்லர் எந்த யுத்தத்தில் இறந்தார்?

3.சாதாரண சீட்டுக் கட்டில் இரண்டு ஜாக்கிகளின் படம் ஒரு கண்ணுடனும், மற்ற இரு ஜாக்கிகள் இரண்டு கண்களுடனும் இருக்கும். ஒரு சீட்டுக்கட்டில் நான்கு ஜாக்கிகளுக்கும் மொத்தம் எத்தனை கண்கள்?

4.தொடர்ந்து நாலு முறை "மேன் ஆஃப் த மேட்ச்" வென்ற இந்திய கிரிக்கெட்காரர் யார்?

5.சீன ஒலிம்பிக்கில் முதல் தங்கப் பதக்கம் வென்றது யார்?

6.உலகின் முதல் இளம் (8 வயது) மைக்ரோசாப்ட் ப்ரொபஷனல் ஆன பெண் யார்?

7.வீணைக்கு தஞ்சாவூர். வயலின் செய்ய பெயர் பெற்ற ஊர் எது?

8.இந்த பாட்டு வரியைக் கொண்டு படங்கள் எது என்று சொல்லுங்கள்.

அ) அங்குமிங்கும் சேர்த்து வைக்க
எங்களூக்கும் வயசில்லே
உங்களுக்கும் மனசில்லே

ஆ) மாமன்மார் மூவர் தம்பி
நல்ல வாழ்வளிக்க வருவார்

போனஸ் மார்க். மூன்று மாமா பெயர் என்ன

7 comments:

நானானி said...

1) இதுதாண்டா போலீஸ்
2) மேலும் கீழும் சேர்த்து மொத்தம்
பன்னிரெண்டு
3) இரண்டாவது உலகப் போர்
4) கவாஸ்கர் (?!)
5) அபினவ்

நானானி said...

6) பாஸ்
7) பாரீஸ்(பிரஞ்சு)
8) (அ)குழந்தையும் தெய்வமும்
(ஆ)பராசக்தி
சந்தசேகரன்,ஞானசேகரன்,குணசேகரண்

ராமலக்ஷ்மி said...

முதல் கேள்விக்கு பதில் அடித்துச் சொல்கிறேன் "களத்தூர் கண்ணம்மா"
:)))!

மற்றவற்றிகெல்லாம் பதில் ஏற்கனவே இடப்பட்டாகி விட்டது. எட்டில்,(அ)

//அங்குமிங்கும் சேர்த்து வைக்க
எங்களூக்கும் வயசில்லே
உங்களுக்கும் மனசில்லே//
கண்ணை உருட்டி உருட்டி குட்டி பத்மினி நடித்த பாடல் மறக்குமா:)?

நானானி சொல்லாமல் விட்டது:
6) Arfa Karim எனும் பாகிஸ்தானியச் சிறுமி?!

நானானி உங்கள் விடைத் தாளில் இம்முறையும் 2,3 கேள்விகளுக்கான பதில்கள் இடம் மாறி விட்டன. எந்த எக்ஸாமினரும் அதற்கு மார்க் கொடுப்பதில்லை. என்னதான் பங்கு பெறும் எல்லோருக்கும் பரிசு கிடைக்கப் போகிறது:) என்றாலும் அடுத்த முறை கவனமாக எண்களை இடுங்கள்.

நானானி said...

சரி..சரி..சரி..!

ஜோசப் பால்ராஜ் said...

கமல் மீசையில்லாமல் நடித்த முதல்படம் நாயகன்.

2008 பீஜிங் ஒலிம்பிக் போட்டியின் முதல் தங்கம் துப்பாக்கி சுடும் பிரிவில் செக் குடியரசை சேர்ந்த கேத்ரீனா இம்மோன்ஸ் வாங்கினார். மிகவும் எதிர்பார்க்கப்பட்ட சீன வீராங்கனை தோல்வியை தழுவினார்.

உலகின் மிக இளைய எம்சிபி ஆர்ஃப கரிம் என்பது நேற்றைய சாதனை அவரது வயது 10.
தற்போதைய சாதனையாளர் தமிழகத்தின் மதுரையை சேர்ந்த 8 வயது லவிணா தேவி. இவர் தமிழகத்தின் வடக்கு மண்டல காவல்துறை ஐ.ஜி. கே.ராதகிருஷ்ணணின் சகோதரர் கே.முனியப்பனின் மகள்.

ஹிட்லர் இறந்தது ஜனவரி 16, 1945, இரண்டாம் உலகப்போரில் ரஷ்யப்படைகள் பெர்லினை கைப்பற்றி முன்னேறிக்கொண்டிருந்ததால் துப்பாக்கியால் சுட்டுக்கொண்டும், சயனைட் அருந்தியும் தற்கொலை செய்துகொண்டார்.

அய்யா, சொல்லியிருக்க பதிலுக்கு மார்க்கு பேட்டு, சொல்லாம விட்டதுக்கு கழிச்சுக்கிட்டு , இவ்ளோ விரிவா சொல்லியிருக்கதுக்கு ஏதாச்சும் கொஞ்சம் பார்த்து போட்டு பரிச குடுங்க.

ambi said...

அவ்வ்வ், இவ்ளோ கஷ்டமா இருக்கே கேள்விகள்னு தெரிஞ்சத சொல்ல வந்தா ஏற்கனவே சில பேர் பதில் சொல்லிட்டாங்க.

சரி என் பதில்:
1) பேசும் படம்
2) 2ம் உலக போர்
4) யுவராஜ் சிங்க்
7) லால்குடி

ambi said...

comment moderate pannunga anna :)