Sunday, August 10, 2008

கமல்ஹாஸன் மீசையில்லாமல் நடித்த முதல்..........

புதிய க்விஸ்-ல் முதல் கேள்வி இதுதான்......படம் எது?

2.ஹிட்லர் எந்த யுத்தத்தில் இறந்தார்?

3.சாதாரண சீட்டுக் கட்டில் இரண்டு ஜாக்கிகளின் படம் ஒரு கண்ணுடனும், மற்ற இரு ஜாக்கிகள் இரண்டு கண்களுடனும் இருக்கும். ஒரு சீட்டுக்கட்டில் நான்கு ஜாக்கிகளுக்கும் மொத்தம் எத்தனை கண்கள்?

4.தொடர்ந்து நாலு முறை "மேன் ஆஃப் த மேட்ச்" வென்ற இந்திய கிரிக்கெட்காரர் யார்?

5.சீன ஒலிம்பிக்கில் முதல் தங்கப் பதக்கம் வென்றது யார்?

6.உலகின் முதல் இளம் (8 வயது) மைக்ரோசாப்ட் ப்ரொபஷனல் ஆன பெண் யார்?

7.வீணைக்கு தஞ்சாவூர். வயலின் செய்ய பெயர் பெற்ற ஊர் எது?

8.இந்த பாட்டு வரியைக் கொண்டு படங்கள் எது என்று சொல்லுங்கள்.

அ) அங்குமிங்கும் சேர்த்து வைக்க
எங்களூக்கும் வயசில்லே
உங்களுக்கும் மனசில்லே

ஆ) மாமன்மார் மூவர் தம்பி
நல்ல வாழ்வளிக்க வருவார்

போனஸ் மார்க். மூன்று மாமா பெயர் என்ன

Monday, June 30, 2008

நாலு பேரில் மூவர் தமிழ் படத்தில் நடிக்க வந்துவிட்டார்கள்.

இரண்டாவது ரவுண்ட் கேள்விகள் இன்று வருகிறது.

1. பூமி சூரியனை ஒருமுறை சுற்றி வர ஆகும் நேரம் எவ்வளவு?

2. காண்டீபம் என்றால் என்ன?

3. நாலு பேரில் மூவர் தமிழ் படத்தில் நடிக்க வ்ந்து விட்டார்கள்.
இன்னும் வராத அந்த நாலாவது அப்ஸரஸ் யார்?

4. ரோமன் நியூமரெல் LXXXVIII எந்த எண்னை குறிக்கும்?

5. டெல்லா ஸ்ட்ரீட் யார்?

6. கண்டு பிடித்த ANTOINE JOSEPH ______ பெயரிலேயே
அந்த காற்று இசைக் கருவி அழைக்கப் படுகிறது. எது?

7. பாற்கடலை கடைய நாணாக பயன்படுத்தப் பட்ட பாம்பு பெயர் என்ன?

8. எம்.எஸ்.சுப்புலக்ஷ்மி போலவே நன்றாக பாடக் கூடியவர்.
சின்னவயதிலேயே மறைந்து விட்டார். அவரது பிரபல பாடல்-
"தந்தை தாய் இருந்தால்........". அவர் யார்?

9. "Genius is one percent inspiration and ninety nine percent perspiration".
சொன்னது யார்?

10."சபாஷ் சரியான போட்டி" என்று வீரப்பா சொன்னது போல
"அதான் எனக்கு தெரியுமே" என்று சொல்லி பிரபலமான நடிகை யார்?

Sunday, April 20, 2008

மார்க் கோஸ் டு க்விஸ் மாஸ்டர்

நான் முன்பு பார்த்த வினாடி வினா நிகழ்ச்சிகளில் கடினமான கேள்விகள் கேட்டு "மார்க் கோஸ் டு க்விஸ் மாஸ்டர்" என்று அவர் தன் ஜி.கே நாலட்ஜ்ஜை வெளிப்படுத்துவார். முதல் ர்வுண்டுகளிலாவது ஈசியான கேள்வி கேட்டு மாணவர்களை உற்சாகப் படுத்தினாலென்ன என்று நினைப்பேன்.
டிவியில் லிம்கா க்விஸ்ஸில் சித்தார்த்த பாசு பார்த்த பிற்கு என்க்கு ஒரு ஆர்வம் வந்தது. பின்னர் ரோட்டரியிலும், கல்லூரி, பள்ளிகளிலும் நான் நிறைய நடத்தினேன்.
ரொம்ப நாட்களுக்குப் பிறகு இதோ என் கேள்விகளுடன் வருகிறேன். முதல் ரவுண்டு. ஈஸிதான்.


1. அஸ்ட்ரோநாட், காஸ்மோநாட் இருவருக்கும் என்ன வித்தியாசம்?

2. நிரப்புக: - - - லாரல் ; - - - - ஹார்டி

3. சோலார் சிஸ்டத்தில் காஸினி டிவிஷன் என்பது எதைப் பிரிக்கிறது?

4. எந்த யு.எஸ் மாநிலத்தின் பெயர் இங்கிலாந்து ராணி,
முதல் எலிஸபெத் நினைவாக அமைந்தது?

5. பாதுகாப்பான தகவல் அமைப்பாக 1969ல் அமெரிக்காவின்
பென்டகன் நிபுணர்கள் அமைத்த கம்ப்யூட்டர் நெட்வொர்க் எது?

6. டெளனிங் ஸ்ட்ரீட் ல் ப்ரிட்டிஷ் பிரதமர் வசிக்கிறார். ட்ரூரி லேன் ல் வசிப்பது யார்?

7. கார்டிலியா, கானெரில், ரேகன். இப்பெண்களின் தந்தை யார்?

8. இந்திய நாடாளுமன்றத்தில் முதல் பெண் மந்திரி யார்?


9. முருகனின் வாகனம் மயில். வினாயகருக்கு மூஞ்சுறு.
இந்திரனின் வாகனம் எது? அதன் பேர் என்ன?

10. ஹிந்தியில் முதல் சினிமாஸ்கோப் படம் எது?

க்விஸ் மாஸ்டருக்கு ஒரு மார்க் கூட கிடைக்காது. ஈஸிதானே. பின்னூட்டத்தை முதலில் பார்த்து விடாதீர்கள். யோசித்து எழுதுங்கள்.