Sunday, April 20, 2008

மார்க் கோஸ் டு க்விஸ் மாஸ்டர்

நான் முன்பு பார்த்த வினாடி வினா நிகழ்ச்சிகளில் கடினமான கேள்விகள் கேட்டு "மார்க் கோஸ் டு க்விஸ் மாஸ்டர்" என்று அவர் தன் ஜி.கே நாலட்ஜ்ஜை வெளிப்படுத்துவார். முதல் ர்வுண்டுகளிலாவது ஈசியான கேள்வி கேட்டு மாணவர்களை உற்சாகப் படுத்தினாலென்ன என்று நினைப்பேன்.
டிவியில் லிம்கா க்விஸ்ஸில் சித்தார்த்த பாசு பார்த்த பிற்கு என்க்கு ஒரு ஆர்வம் வந்தது. பின்னர் ரோட்டரியிலும், கல்லூரி, பள்ளிகளிலும் நான் நிறைய நடத்தினேன்.
ரொம்ப நாட்களுக்குப் பிறகு இதோ என் கேள்விகளுடன் வருகிறேன். முதல் ரவுண்டு. ஈஸிதான்.


1. அஸ்ட்ரோநாட், காஸ்மோநாட் இருவருக்கும் என்ன வித்தியாசம்?

2. நிரப்புக: - - - லாரல் ; - - - - ஹார்டி

3. சோலார் சிஸ்டத்தில் காஸினி டிவிஷன் என்பது எதைப் பிரிக்கிறது?

4. எந்த யு.எஸ் மாநிலத்தின் பெயர் இங்கிலாந்து ராணி,
முதல் எலிஸபெத் நினைவாக அமைந்தது?

5. பாதுகாப்பான தகவல் அமைப்பாக 1969ல் அமெரிக்காவின்
பென்டகன் நிபுணர்கள் அமைத்த கம்ப்யூட்டர் நெட்வொர்க் எது?

6. டெளனிங் ஸ்ட்ரீட் ல் ப்ரிட்டிஷ் பிரதமர் வசிக்கிறார். ட்ரூரி லேன் ல் வசிப்பது யார்?

7. கார்டிலியா, கானெரில், ரேகன். இப்பெண்களின் தந்தை யார்?

8. இந்திய நாடாளுமன்றத்தில் முதல் பெண் மந்திரி யார்?


9. முருகனின் வாகனம் மயில். வினாயகருக்கு மூஞ்சுறு.
இந்திரனின் வாகனம் எது? அதன் பேர் என்ன?

10. ஹிந்தியில் முதல் சினிமாஸ்கோப் படம் எது?

க்விஸ் மாஸ்டருக்கு ஒரு மார்க் கூட கிடைக்காது. ஈஸிதானே. பின்னூட்டத்தை முதலில் பார்த்து விடாதீர்கள். யோசித்து எழுதுங்கள்.