Monday, June 30, 2008

நாலு பேரில் மூவர் தமிழ் படத்தில் நடிக்க வந்துவிட்டார்கள்.

இரண்டாவது ரவுண்ட் கேள்விகள் இன்று வருகிறது.

1. பூமி சூரியனை ஒருமுறை சுற்றி வர ஆகும் நேரம் எவ்வளவு?

2. காண்டீபம் என்றால் என்ன?

3. நாலு பேரில் மூவர் தமிழ் படத்தில் நடிக்க வ்ந்து விட்டார்கள்.
இன்னும் வராத அந்த நாலாவது அப்ஸரஸ் யார்?

4. ரோமன் நியூமரெல் LXXXVIII எந்த எண்னை குறிக்கும்?

5. டெல்லா ஸ்ட்ரீட் யார்?

6. கண்டு பிடித்த ANTOINE JOSEPH ______ பெயரிலேயே
அந்த காற்று இசைக் கருவி அழைக்கப் படுகிறது. எது?

7. பாற்கடலை கடைய நாணாக பயன்படுத்தப் பட்ட பாம்பு பெயர் என்ன?

8. எம்.எஸ்.சுப்புலக்ஷ்மி போலவே நன்றாக பாடக் கூடியவர்.
சின்னவயதிலேயே மறைந்து விட்டார். அவரது பிரபல பாடல்-
"தந்தை தாய் இருந்தால்........". அவர் யார்?

9. "Genius is one percent inspiration and ninety nine percent perspiration".
சொன்னது யார்?

10."சபாஷ் சரியான போட்டி" என்று வீரப்பா சொன்னது போல
"அதான் எனக்கு தெரியுமே" என்று சொல்லி பிரபலமான நடிகை யார்?

11 comments:

J.S.ஞானசேகர் said...

9. மக்கள் விஞ்ஞானி ஆல்வா தாமஸ் எடிசன்

மூன்றாவது கேள்வி சூப்பர்ங்க. யாரு திலோத்தம்மாவா?

மேலும் பல கேள்விகளை எதிர்பார்த்து,
- ஞானசேகர்

ராமலக்ஷ்மி said...

2.வில்
5.பெர்ரி மேஸனின் செகரட்டரி
6.சாக்ஸஃபோன்
7.வாசுகி
9.Thomas Edison
10. தங்கவேல் காமெடியில் வருவார்.

கடைசி விடைக்கு பாதி மார்க்காவது தருவீர்கள்தானே:)?

நானானி said...

2) அர்ஜுனனின் வில்
3) திலோத்தமை
7) வடவரை-யை மத்தாக்கி..
8) என்.சி.வசந்தகோகிலம்
9) டி.பி.முத்துலட்சுமி..மி..மி..மி!

இவ்ளோதான் தெரியும்.

ராமலக்ஷ்மி said...

நானானி..னி..னி..னீ..ங்க முத்துலெட்சுமி..மி..மி..மின்னு போட்டதற்கு முன்னால் பத்துன்னு வரணும்:))!

ராமலக்ஷ்மி said...

ரிஸல்ட், மார்க் எல்லாம் எப்போ வரும் சகாதேவன்:)?

நானானி said...

சரி சரி சரி...ரி..ரி..ரி..ராமலஷ்மி..மி..மி

நானானி said...

ரிசல்ட்..மார்க்..அதோடு பரிசு! அத்தை விட்டுட்டீங்களே ராமலஷ்மி!!!
எவ்வளவு தவறு இருக்குதோ அதுக்கு தகுந்தபடி பரிசுத்தொகையை குறைத்துக்கொள்ளலாம்.

ராமலக்ஷ்மி said...

நானானி said...
//ரிசல்ட்..மார்க்..அதோடு பரிசு! அத்தை விட்டுட்டீங்களே ராமலஷ்மி!!!
எவ்வளவு தவறு இருக்குதோ அதுக்கு தகுந்தபடி பரிசுத்தொகையை குறைத்துக்கொள்ளலாம்.//

சகாதேவன் எப்போதும் பங்கு பெறும் எல்லோருக்கும் பரிசு கொடுப்பார்."நம்மில் யார் முகம் வாடினாலும் மனம் பொறுத்திடார்." மேல் விவரங்களுக்கு காண்க அவரது "தித்திப்பான பத்து விஷயங்கள்"
http://vedivaal.blogspot.com/2008/06/blog-post_24.html

சகாதேவன் said...

விடைகள்
1. 365 நாட்கள்
2. அர்ஜுனனின் வில்
3. திலோத்தமை
4. 88 (எண்பத்துஎட்டு)
5. பெரிமேசனின் செக்ரட்டரி
6. சக்ஸஃபோன்
7. வாசுகி(பாம்பு)
8. தாமஸ ஆல்வா எடிசன்
10. டி.பி.முத்துலக்ஷ்மி

மார்க்
ஞானசேகரன் 2
3வது கேள்வி சூப்பர் என்று
பாராட்டினார்.நன்றி
ராமலக்ஷ்மி 6.
நானானி 5

J.S.ஞானசேகர் said...

இல்லங்க. முதல் கேள்விக்கு 365 நாட்கள் சரியான பதிலல்ல.

நேரம் எவ்வளவு என்று கேட்டு இருக்கிறீர்கள். 365 நாட்களும் அரை நாளுக்குக் கம்மியான நேரமும் வரும். அதாவது, 365 நாட்கள், 5 மணிகள், 58 நிமிடங்கள் என்று ஏறக்குறைய வரும். இதைச் சரிகட்டவே போப் பதிமூன்றாம் கிரிகோரியார் 1582ல் லீவ் வருடம் என்ற முறையை உருவாக்கி, பிப்ரவரி மாதத்தில் ஒரு நாளை நான்கு வருடத்திற்கு ஒருமுறை கூட்டச் சொன்னார்.

இன்னும் நிறைய கேள்விகளை எதிர்பார்த்து,
- ஞானசேகர்

சரவணப்பிரகாஷ் said...

2.மகாபாரத பார்த்தனின் வில்
4.138
7.வாசுகி என்ற ஐந்து தலை நாகம்
10.கலைவாணர் மனைவி டி.எம்.மதுரம் சப்பாத்தி காமடி